×

ஈரோடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு : ஈரோடு மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி மார்க்கெட்டிலும், நாச்சியப்பா வீதியில் உள்ள சின்ன மார்க்கெட்டிலும் காய்கறிகள் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மார்க்கெட்டுகளுக்கு சின்ன வெங்காயம் ஈரோட்டின் சுற்றுப்புற பகுதிகளான சத்தியமங்கலம்,பண்ணாரி,தாளவாடி, அறச்சலூர்,பூந்துறை,உடுமலை,பொள்ளாச்சி,தாராபுரம்,காங்கேயம்,வெள்ளக்கோவில் போன்ற பகுதிகளில் இருந்தும், பெரிய வெங்காயம் ஆந்திரா, மகாராஷ்டிரா,நாசிக், கர்நாடகா மாநிலம் மைசூர் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் ஈரோட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இந்த மார்க்கெட்டில் நாள் ஒன்றுக்கு சின்ன, பெரிய வெங்காயங்கள் 150 டன் வரத்தாகும்.

ஆனால், கடந்த சில 2 மாதங்களாக வெங்காயம் வரத்து குறைந்து இருந்ததால், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 வரையும்,பெரிய வெங்காயம் 2 கிலோ ரூ.100 வரையிலும் விற்பனையானது. இந்நிலையில்,ஈரோடு மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம்,பெரிய வெங்காயம் வரத்து படிப்படியாக அதிகரித்தால்,அதன் விலையும் மளமளவென சரிந்துள்ளது.

இதில், நேற்று ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் தரத்திற்கு தகுந்தாற்போல் 3 கிலோ ரூ.100க்கும், 4 கிலோ ரூ.100க்கும், அதேபோல், பெரிய வெங்காயம் 4 கிலோ மற்றும் 5 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post ஈரோடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி: மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode V.U.C. ,Netaji ,Maidan ,Nachiyappa Road ,Dinakaran ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...